உதவி இயக்குநரை தாக்கிய கதாநாயகன்!! சீரியல் ஷூட்டிங்கில் அடிதடி ரகளை!!

 

சின்னத்திரை கதாநாயகன், உதவி இயக்குனரை தாக்கிய சம்பவத்தால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை மதுரவாயல் அருகே கிருஷ்ணாநகர் 1வது தெருவில் தனியார் தொலைக்காட்சி சீரியல் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த தொலைக்காட்சி சீரியலில் நடிகர் நவீன் கதாநாயகனாக இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே பூலோகம், பட்டாசு, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நவீன் நடித்து வரும் தனியார் தொலைக்காட்சி சீரியலின் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் குணசேகர். இவருக்கும், நடிகர் நவீனுக்கும் இடையில் படப்பிடிப்பு தளத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நவீன், உதவி இயக்குனர் குணசேகரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் குணசேகரனுக்கு மூக்கு மற்றும் கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் காயங்களுடன் மதுரவாயல் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதில், ‘‘படப்பிடிப்புக்கு நேரமாகிவிட்டது. சீக்கிரம் வாருங்கள் என்று நடிகர் நவீனை குணசேகர் அழைத்துள்ளார். இதனால் நவீன் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், சரமாரியாக மூக்கு மற்றும் கன்னத்தில் தாக்கி காயம் ஏற்படுத்திவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் நடிகர் நவீன் குறித்து உதவி இயக்குனர் குணசேகர் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நவீன் மற்றும் குணசேகர் தரப்பை அழைத்து போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் தங்கள் சங்கத்தின் மூலம் இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வதாக இரு தரப்பினரும் கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது. இருப்பினும் நவீனை தொடர்பு கொண்டு இந்த புகார் குறித்து கேட்க முயற்சித்த போது அவர் இணைப்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.சீரியல் படப்பிடிப்பின் போது உதவி இயக்குனரை கதாநாயகன் சரமாரியாக தாக்கிய சம்பவம் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!