மாதம் ரூ1000 திட்டம்!! கால அவகாசம் நீட்டிப்பு!! உயர்கல்வித்துறை அதிரடி!!

 

தமிழகத்தில் மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் பெண்களுக்கான உயர்கல்வி திட்டமாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளத்து. இத்திட்டத்தின் படி கல்லூரி பயிலும் மாணவியருக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக  ரூ.1,000 வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. 


இத்திட்டத்தின் படி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. மாணவிகளுக்கான  இந்த உதவித் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்து இருந்தது.


இந்நிலையில், இதற்கான பணிகளை விரைந்து செய்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவியர்கள் பலர் விண்ணப்பங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை ஏற்று அவர்களுக்கு மேலும் 2  நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்து, தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும், உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  இந்த அதிரடி அறிவிப்பு மாணவியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?