பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ1500 ஊக்கத் தொகை !!  விண்ணப்பிக்கும் முறை, முழுத் தகவல்கள்!!

 

தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், அவர்களை ஊக்குவிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.  பள்ளிப்படிப்பு முடித்து  பள்ளியில் இருந்து வெளியேறும் போதே அனைத்து திறன்களையும் கற்று தேர்ந்திருக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக  தமிழ் மொழித் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு  அக்டோபர் மாதம் நடத்தப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்கள் இந்த திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் . இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக மாதம் ரூ.1,500 வீதம் 2 வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50% அரசுப் பள்ளி மாணவர்களும்,  50%  தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திறனறிவுத் தேர்வு குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல், கணிதம், சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளில் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல்  தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-2023ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது” எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிக்கும் முறை 


அக்டோபர் மாதம் 1ம் தேதி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் நடத்தப்படும். பள்ளிகளின் மூலம் விண்ணப்பிக்கலாம்.  10ம் வகுப்பு தரநிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும்.
இத்தேர்வுக்கான விண்ணப்பபங்களை dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2022 முதல் 09.09.2022 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் செப்டம்பர் 9ம் தேதிக்குள் சேர்த்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?