undefined

போர்க்களத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட ரஷ்யா உக்ரைன் ஜோடி!! 

 

 

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன்& ரஷியா இடையிலான போர் இன்றளவும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் போர்க்களத்தில் காதல் ஜோடி திருமணம் நடந்த சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுக்க ஆரம்பித்தது. ரஷிய அதிபர் புதின் கட்டளைக்கிணங்க ரஷிய போர் வீரர்கள் வான்வழி தாக்குதல் நடத்தி உக்ரைன் நாட்டை உருகுலையச் செய்துள்ளனர். முதல் கட்டமாக அரசு கட்டிடங்களை குறிவைத்த அவர்கள், நாளடைவில் பொது மக்களின் இருப்பிடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தினர்.

செர்ஜி நோவிகோவ் என்ற ரஷிய வாலிபர், எலோனா பிரமோகா என்ற உக்ரைன் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் திருமணம் இமாச்சலபிரதேசத்தின் தர்மசாலா உள்ள திவ்யா ஆசிரம கரோட்டாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நல்ல முறையில் நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்து முறைப்படி நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சக்கட்டம். உள்ளூர் வாசிகள் கலந்து கொண்ட இந்த வினோத திருமணத்தில் நாட்டுப்புறபாடல்கள் பாடியும் நடனமாடியும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வெளிநாடுகளைச் சேர்ந்த காதல் மணமக்கள் இருவரும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து திருமணம் செய்து கொண்டது பெரும் வரவேற்பையும், வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது. எதையும் தாண்டி உண்மை காதல் வெல்லும் என்பதை இந்த ஜோடி நிரூபித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?