undefined

கலங்க  வைக்கும் வீடியோ!! அறுந்து விழும் மோர்பி தொங்கு பாலம் !! 

 

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் அக்டோபர் 30ம் தேதி  நேற்று முன்தினம் சனிக்கிழமை தொங்கு பாலம் திடீரென்று இடிந்து விழுந்து 140க்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில்  பரிதாபமாக உயிரிழந்தனர்.பாலத்தில் ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பாரம் தாங்காமல் பாலத்தின் கேபிள் பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  அப்போது பாலத்தின் மேல் இருந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் பாலத்திற்கு அடியில் இருந்த ஆற்றில் தவறி விழுந்தனர்.


இந்த கோர விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் உயிரோடு மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
விபத்து பகுதியில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இன்னும் பலரது உடல்கள் ஆற்றின் அடியில் சிக்கியுள்ளது.

இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி, “குஜராத் தொங்குபாலம் விபத்தில் என் நெஞ்சே வலிக்கிறது. ஒருபுறம் வலி நிறைந்த இதயம் இருந்தாலும், மறுபுறம் கடமைக்கான பாதையும் இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என மிகுந்த கவலை தெரிவித்துள்ளார். 
அதன்படி அந்த இரவில் மோர்பி தொங்கு பாலத்தில் நுழைந்த சுற்றுலாப் பயணிகளும், சிறிது நேரத்தில்  அறுந்துவிழும் சிசிடிவி காட்சியும் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காண்பவர்களை கலங்க வைக்கும்  இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் வைரலாகி வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!