பேரதிர்ச்சி!! அணு ஆயுதங்களை  சுமந்து  உக்ரைனை  நோக்கி  செல்லும்  ரஷ்ய  ரயில் !!

 

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 225 நாளை கடந்து நடந்து கொண்டிருக்கின்றது. இதில் ஏராளமான மக்கள் தங்களது உயிர்களை இழந்துள்ளனர்.  இந்த போரை தடுத்து நிறுத்த கோரி உலக தலைவர்கள் கூறியும் ரஷ்யா அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 225 நாட்களுக்கும் மேலாக அங்கு போரை  நடத்தி வருகின்றது.  இதனால் உக்ரைன் மக்கள்  நிலைகுலைந்துள்ளனர். ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், பல்லாயிர கணக்கான மக்கள் பல்வேறு  நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யா சமீபத்தில் உக்ரைனின் 3 மாகானங்களை தனக்கு சொந்தமாக அறிவித்தது. தொடர்ந்து அங்கு முகாமிட்டுள்ள ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனின் முக்கிய  இடங்களை தாக்கி அழித்து வருகின்றது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு சொந்தமான ரயில் ஒன்று அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு உக்கிரனை நோக்கி செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இந்த ரயில் ரஷ்யாவின் படைப்பிரிவுக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த ரயில் உக்ரைன் எல்லையிலிருந்து கிட்டத்தட்ட 300 மைல் முதல் 400 மைல் தொலைவில் காணப்படுகிறது. இதனை முன்னாள் பிரித்தானிய ராணுவ உளவுத்துறை அலுவலரான Forbes McKenzie என்பவர் உறுதி செய்துள்ளார். மேலும் மேற்கத்திய நாடுகளை எச்சரிப்பதற்காக கூட ரஷ்யா இதனை செய்திருக்க வாய்ப்புண்டு என அவர் கூறுகிறார். ஆனால் இப்படி அணு ஆயுத தாக்குதல் தொடர்பான தகவல் வெளியாகி இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.