undefined

அதிர்ச்சி! நடுரோட்டில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை! 

 

சென்னையில், பட்டப்பகலில் நடுரோட்டில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பூந்தமல்லியை அடுத்த வெள்ளவேடு பகுதியில் வசித்து வந்தவர் ஸ்டீபன் ராஜ் (26). இவர் மீது வெள்ளவேடு காவல் நிலையயத்தில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஸ்டீபன் ராஜ் தனியார் டெலிபோன் ஒயர் பதிக்கும் வேலை செய்து பார்த்து வந்தார்.

இந்நிலையில் பூந்தமல்லி அடுத்த புளியம்பேடு நூம்பல் பகுதியில் நேற்று மாலை ஸ்டீபன் ராஜ் டெலிபோன் ஒயர் பதிப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தின் உதவியாளரை அழைத்துக் கொண்டு சென்றார்.

ஸ்டீபன்ராஜ் வாகனம் புளியம்பேடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் 6 பேர் திடீரென்று வழிமறித்து வெட்ட முயற்சி செய்தார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டீபன்ராஜ் தப்பி ஓட முயன்றார். இருப்பினும் அந்த மர்ம கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த ஸ்டீபன் ராஜ் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ஸ்டீபன்ராஜ் வாகனத்தில் உடன் வந்த உதவியாளர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

படுகொலை குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி ஆணையர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்டீபன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உதவியாளரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஸ்டீபன்ராஜ் உதவியாளரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும்  ஆய்வு செய்கின்றனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஸ்டீபன் ராஜை படுகொலை செய்தது யார் என்பது தெரிய வந்தது. வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த எபினேசர், கிருபாகரன் திருப்பதி உள்ளிட்ட 6 பேரை போலீசார் அடையாளம் கண்டனர். தொடர்ந்து 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டியா? அல்லது முன்பகை ஏதேனும் இருக்குமா என்ற பல்வேறு கோணத்தில் துருவிதுருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?