அடி தூள்!!ரயில் பயணத்தில் குழந்தைகள் , நோயாளிகளுக்கு சிறப்பு உணவு!!

 

ரயில் பயணங்களில் சில ரயில்களில் உணவுகளை முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ளலாம். ராஜ்தானி, சதாப்தி ரயில்கள் இந்த வசதி உள்ளது. இந்த ஆர்டர்களின் அடிப்படையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறையில் குறிப்பிட்ட வகை உணவுகள் மட்டுமே பெற முடியும். குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், முதியவர்கள் என்ற அடிப்படையில் உணவுகள்  பிரித்து வழங்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து தற்போது தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில் பயணங்களில் உணவு விநியோக சேவையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகை கள், பருவகால உணவு வகைகள், பண்டிகைகால உணவுகள் என பல்வேறு தொகுப்பு உணவுகளை  வழங்க இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் முடிவு செய்துள்ளது. இந்த உணவுக்கான பட்டியலை இந்தியன் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ  இணைய தளம் அல்லது செயலி மூலம் பெற முடியும்.

இதே சமயத்தில் பாப்புலரான சில உணவு வகைகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு, குழந்தைகளுக்கான உணவு, சிறு தானிய அடிப்படையிலான உள்ளூர் தயாரிப்புகள்  என இந்த மெனுவின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போதே உணவுக்கான கட்டணம் செலுத்தி விட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!