undefined

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா!

 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. ஆகையால் மக்களே இந்த பண்டிகை காலத்தில், ஜனநெருக்கடியான இடங்களுக்கு பயணிப்பதைத் தவிருங்கள். மீண்டும் முக கவசத்தை அணிவதற்கு மறக்காதீங்கள். 

 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசனுக்கு கடந்த இரண்டு நாட்களாகவே காய்ச்சலும், சளி, இருமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவ மனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே முத்தரசனின் உடல்நிலை குறித்து மாநில துணை செயளாளர் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முத்தரசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராகவும், இயல்பாகவும் இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!