சூப்பர்!! சட்டப்படிப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு!! அதிரடி அறிவிப்பு!!

 

தமிழகத்தில் ஜூன்  முதல் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜூன் 20ம் தேதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. மேலும் ஜூலை 23-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது. சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் தாமதமாக வந்த நிலையில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டில் சுமார் 2 லட்சத்து 11 ஆயிரத்து 115 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதற்கான விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்த நிலையில், கல்லூரிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சட்ட கல்லுாரிகளில் மூன்று ஆண்டு எல்.எல்.பி. படிப்பில் சேர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. சீர்மிகு சட்ட கல்லுாரி 14 அரசு கல்லுாரிகள் மற்றும் திண்டிவனம் தனியார் சரஸ்வதி சட்ட கல்லுாரி ஆகியவற்றில் 1,761 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இதற்கான விண்ணப்பபதிவு மே 4-ம் தேதி தொடங்கியது.  சட்ட பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம் செப்டம்பர் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?