சூப்பர்!! அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் இவங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்!!

 

தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் விதவை, கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு கடன் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அவர்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் அதாவது 5% வட்டியில், அவர்களின் பொருளாதார நிலை உயர கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி   தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கடன் உதவி வழங்கப்படும். ரூ4000க்கும்  குறைவான மாத வருமானம் உள்ள அனைத்து கைம்பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்கள் ஆகியோர் இந்த கடன் திட்டத்தின் மூலம்  பயனடையலாம். ரூ.5000லிருந்து ரூ.25000 வரை வழங்கப்படும்.  

பெறப்பட்ட  கடன் தொகையை அதிகபட்சம் 120 நாட்களுக்குள் மாதம் இருமுறை என்ற அடிப்படையில் திருப்பி செலுத்தலாம். தூத்துக்குடியில் அமைந்துள்ள  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 26 கிளைகளிலும் இந்த கடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 296 பயனாளிகள் இதன் மூலம் கடன் தொகை பெற்றுள்ளனர். 


இத்திட்டத்தில் பயனடைய தேவையான சான்றுகள்:

விதவைச் சான்று, விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரரின் ஆதார் கார்டு மற்றும் ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவில் 2 புகைப்படம்  இந்த  ஆவணங்களை அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சமர்ப்பித்து கிளை மேலாளரை அணுகி கடன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!