மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு வழங்க தமிழக அரசு உத்தரவு!
தமிழகம் விடியலை நோக்கி செல்கிறதா? இல்லையா? என்றெல்லாம் விவாதத்திற்குள் செல்ல வேண்டாம். ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சி, ஏழை, எளிய மக்களின் வாழ்வைப் பற்றி அக்கறைப்படுகிற ஆட்சியாகவே இருக்கிறது என்கிறார்கள் பொதுமக்கள். அதற்கு அவர்கள் எடுத்து வைக்கிற உதாரணங்கள் பல பல. வெறும் அரசியல் ஆதாயத்திற்காக அறிக்கை அரசியல் செய்து கொண்டிருக்காமல், 110 விதியின் கீழ், வாய்க்கு வந்ததை எல்லாம் அறிவிப்புகளாக வெளியிடாமல், சொல்வதை, சொன்னதை செய்ய ஒவ்வொரு விஷயத்திலும் மெனக்கெடுகிறார்கள். இந்நிலையில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
திமுக அரசு ஆட்சி அமைப்பதற்கு முன்பு தங்களது தேர்தல் வாக்குறுதியாக ஏராளமான மக்கள் நல திட்டங்களை அறிவித்தது. அதில் பலவற்றை அரசு ஆட்சி அமைத்த உடன் நிறைவேற்றியது. இந்நிலையில் தற்போது வரை பல திட்டங்கள் அரசு அதிகாரிகளை கொண்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இதன் தொடர்சியாக தகுதி வாய்ந்த மாற்று திறனாளிகளுக்கு வீடுகள் மற்றும் அரசு உதவி தொகை வழங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் கடந்த சட்டமன்ற கூட்டதொடரில் முதல்வர் பல திட்டங்களை அறிவித்தார்.
அதில், கிராமங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் வீடு வழங்க கோரியும், நகரங்களில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்க கோரியும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத் தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கையின் போது முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, வீடுகளின் மொத்த ஒதுக்கீட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 5% வழங்கப்பட வேண்டும் என்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தரைத்தள குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!