பேனர்கள், போஸ்டர்கள் கிழிப்பு!! மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு!! நீடிக்கும் பதற்றநிலை!!

 


இந்தியாவின் 76வது சுதந்திர தினம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் வெகு விமரிசையாக சுதந்திர தினத்தை கோகலமாக கொண்டாடின. கர்நாடகாவின் ஷிவமோகாவில் அமீர் அகமது வட்டத்தில் சாவர்க்கரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. திப்புசுல்தான் போஸ்டர்களை ஒட்டுவதற்காக சாவர்க்கரின் போஸ்டர்களை அகற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் ஆத்திரமடைந்த பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதனால் ஷிவமோகாவில் பெரும் பதற்றம் நிலவியது. போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே அமீர்அகமது பகுதியில் பெரும் மோதல் வெடித்ததால் போலீசார் 144 தடை விதித்துள்ளனர். இந்த மோதலில் தரம்சிங் என்ற இளைஞர் முஸ்லிம் இளைஞர்கள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர்.


மேலும் மங்களூருவில் சூரத்கல் சந்திப்பில் எஸ்டிபிஐ தொழிலாளர்கள் தொடர்ந்து ஆட்சேபனைகளை எழுப்பியும் அதை கண்டுகொள்ளாமல் சாவர்க்கரின் பெயரை அந்த வட்டத்திற்கு பெயரிட்டனர். மேலும் பிளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எஸ்டிபிஐ சூரத்கல் பிரிவு இது குறித்து போலீசாருக்கும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் அக்ஷய் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்ததையடுத்து அந்த பேனரை மாநகராட்சி ஊழியர் அகற்றினர்.

மங்களூரு வட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒய்.பரத் ஷெட்டி, அவரது வட்டத்திற்கு சாவர்க்கரின் பெயரை சூட்ட கோரிக்கை வைத்தார். இதற்கு ஒப்புதல் தெரிவித்த மங்களூரு நகர மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக சாவர்க்கரின் பெயரை சூட்ட அரசாங்கத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறை, போராட்டத்தால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மக்கள் தொடர் போராட்டங்களில் இறங்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?