தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து!! 17 பேர் பலியான சோகம்.!

 

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள காவ்ரேபலஞ்சோக் மாவட்டத்தின் பெத்தான்சௌக்கில் உள்ள சைல்டியில் பிரதபந்தா விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்த பேருந்தில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர்   சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பேருந்து சல்லத்தேட் என்ற இடத்தில் வந்துக் கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள  மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அதில் பனேபாவில் உள்ள ஸ்கீர் மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மேல் சிகிச்சைக்காக காத்மண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தின் தலைவர் சக்ர ராஜ் ஜோஷி கூறுகையில்,  விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளன, மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும்   விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர், அவர்கள் பனேபாவில் உள்ள ஸ்கீர் மெமோரியல் மருத்துவமனையிலும், துலிகேல் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் மூவர் காத்மாண்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று கூறினார்.