கன்னித்தன்மையை இழந்த இளம்பெண்! மறைத்து திருமணம் செய்ததால் ரூ.10 லட்சம் அபராதம்! வெளியான பகீர் தீர்ப்பு!

 

கன்னித்தன்மையை இழந்த இளம்பெண், அந்த விஷயத்தை மறைத்து திருமணம் செய்து கொண்ட பின்னர், இளம்பெண்ணுக்கு நடத்தப்பட்ட சோதனையில், திருமணத்திற்கு முன்பே கன்னித்தன்மையை இழந்திருந்தது அம்பலமானது. இதையடுத்து பஞ்சாயத்தார், இளம்பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சன்சி எனப்படும் நாடோடி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் திருமணத்தில், குக்காடி பிரதா என்ற வழக்கம் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது. இதன்படி, பெண்ணுக்கு திருமணம் ஆன உடன் அவரது கன்னித்தன்மை பரிசோதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட சோதனையில், கன்னித்தன்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கணவரின் குடும்பத்தினர் பெண்ணை அடித்து, உதைத்து துன்புறுத்தினர்.

ஒரு கட்டத்தில், தான் ஏற்கனவே பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான உண்மையை அந்த பெண் தெரிவித்தார். இது குறித்து, காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக, கணவர் வீட்டார் உள்ளூர் பஞ்சாயத்தை கூட்டினர்.

அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பஞ்சாயத்து தீர்ப்பளித்தது. மணமான பெண் அடித்து, உதைக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கணவர் வீட்டார் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான முதல் நாள் நடத்திய சோதனையில் கன்னித்தன்மை இல்லாததால், 24 வயது பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!