வீட்டு வாசலில் விளையாடிய சிறுமி கடத்தல்!! ஒரே மணி நேரத்தில் மீட்ட காவல்துறை!! பரபர நிமிடங்கள்!!

 

பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு தீவிர கண்காணிப்புக்களையும், அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் குற்றச்சம்பவங்களும், அசம்பாவிதங்களும் நிகழ்ந்து வருகின்றன. 

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் திருமலை நகர் முதல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் வினோத். இவர், பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வர்ஷா (4) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை வர்ஷா இரண்டு ஆண் சிறுவர்களுடன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர், சிறுமி வர்ஷாவை மட்டும் ஆட்டோவில் கடத்திச் சென்றார். 

இதை கண்ட சிறுவர்கள் வர்ஷாவின் தந்தை வினோத்திடம் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த வினோத், தனது குழந்தை கடத்தப்பட்டது குறித்து சிடலப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், தாம்பரம் மற்றும் சென்னை காவல் எல்லைகளை எச்சரிக்கைப்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில் சிட்லபாக்கம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீசார் ஆகியோர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியை தேடி வந்தனர். சேலையூர், கேம்ப் ரோடு, வேளச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரமாக உட்புற சாலைகளில் ஆட்டோவில் சிறுமியை வைத்து சுற்றி வந்த மர்ம நபர், இரண்டு இடங்களில் சிசிடிவியில் சிக்கியுள்ளார். 

அதன் பிறகு குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலம் வழியாக வந்த ஆட்டோவில் குழந்தையை கடத்தி வந்தவரை குரோம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், போக்குவரத்து சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தலைமை காவலர் ஜலேந்திரன் மற்றும் முதல் நிலைக் காவலர் முத்துக்குமார் ஆகியோர் ஆட்டோவை நிறுத்தி மடக்கி பிடித்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

போலீசார் நடத்திய விசாரனையில் அவர், குரோம்பேட்டை ராதா நகர் பகுதியை சேர்ந்த சம்சுதின் (30) என்பதும், அவர் சிட்லபாக்கம் காவல் நிலைய சி பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், மது போதையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்ட போலீசாரை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!