பகீர்!! சென்னை கத்திப்பாரா  அருகே  இரும்பு  பெயர்  பலகை  சரிந்துவிழுந்து  ஒருவர் பலி; பலர் காயம்!!

 

சென்னை  கத்திப்பாராவில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் மிகப்பெரிய பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.  இன்று மதியாம்  சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக  இருந்த நேரத்தில் சாலையில்  ஓரத்தில் வைக்கப்படிருந்த மிக பெரிய  இரும்பு  பெயர் பலகையானது திடீரென தரையை மட்டத்திலிருந்து அடியோடு பெயர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் மீது பலமாக விழுந்தது.

 

இதனால் மினி வேன் சாலையில் கவிழ்ந்தது. மேலும் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில்  ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மற்றோறுவர்  சிகிச்சை பெற்று வருகின்றார்.  இந்த திடீர் விபத்தால் இதனால் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து  பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் இதுகுறித்து  தகவல் அறிந்த  வந்த போக்குவரத்து காவல்துறையினர் ம் மேலும் பேருந்து மற்றும் வேனில் சென்று காயமடைந்தவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  பின்னர் சாலையின் நடுவே விழுந்த பெரிய இரும்பு பெயர்பலகையை, இராட்சத இயந்திரம் கொண்டு அகற்றினார். பின்னர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பெயிர் பலகை திடீரென சரிந்து சாலையில் சென்றவர்கள் மீது விழுந்ததால் அப்பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.