சற்றே இறங்கிய தங்கத்தின் விலை!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 

தமிழகத்தில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு நாளில் தங்கத்தின் விலை குறைந்தால் அடுத்த நாளே தங்கம் அதிரடியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,795க்கு விற்பனை  செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் சென்னையில் வெள்ளியின் விலையும் சற்றே குறைந்துள்ளது.அதன்படி வெள்ளியின் விலை  கிராமுக்கு ரூ.40 காசுகள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63.30க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ63,300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


 தங்கத்தின் விலையை பொறுத்தவரை ஜூலை முதல் தேதியில், ஒன்றிய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதனால்  தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. இறக்குமதி வரி அதிகரித்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்தது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது.கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களில் இருமடங்கு விலையேற்றம் அடைந்து வருகிறது.


ஜூலை  27, 28தேதிகளில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.256, ரூ. 304 என அதிகரித்தது. இதனால் தங்கம் உச்சத்தை தொட்டது.  இதனால் நகை வாங்கவே அச்சப்படும் நிலைக்கு முதலீட்டாளர்கள் கலக்கத்தில் இருந்தனர். இதன் பிறகு ஏறுமுகமாகவேஇருந்த தங்கம் இன்று இறங்குமுகமாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி, தங்கத்தின் விலை வழக்கம் போல் சற்று குறைந்து ஒரு சவரன் ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   இன்று தங்கத்தின் விலை சிறிது குறைந்திருப்பது இல்லத்தரசிகளை ஆறுதல் அடையச் செய்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?