மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!! அதிர்ச்சியில்  நகைப்பிரியர்கள்!!

 

சென்னையில் சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை அதிகரித்தது. இதன் பிறகு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சில நாட்கள் குறைந்து விற்பனை செய்யப்பட்டாலும் அடுத்தநாளே இரு மடங்காக தங்கத்தின் விலை உயர்ந்து விடுகிறது.

இதனால் தங்க முதலீட்டாளர்கள், இல்லத்தரசிகள் கடும் அதிருப்தியில் உள்ளன. அந்த வகையில் 2 நாட்களாக சரிந்த தங்கத்தின்விலை இன்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ4730க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்படுகிறதுஅதே போல் வெள்ளியின் விலையும் சற்றே அதிகரித்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் அதிகரித்து ரூ.59.50 ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ59500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்த நிலையில் இந்த வாரத்தின் முதல்நாளான 5ம் தேதி சற்று ஏற்றுத்துடன் விற்பனை செய்யப்பட்டது. 
அதாவது, சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37,888-க்கும், கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,736க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக  நேற்று தங்கத்தின் விலை திடீர் குறைவை கண்டு விற்பனை செய்யப்பட்டது. அதவாது நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.440 குறைந்து ரூ.37,560-க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.4,695க்கும் விற்பனை செய்யப்பட்டது. 


ஆனால், இன்று தங்கத்தின் விலை மக்களை ஏமாற்றம் அளிக்கும் வகையில் சற்று அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.40 அதிகரித்து ரூ.37,840க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4,730க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!