பொறியியல் படிப்பில் சேர கலந்தாய்வில் ரேண்டம் எண் கிடையாது!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

 

தமிழகத்தில் பொறியியல்,  B.Tech., B.Arch., உட்பட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.  மாணவர்கள் http://tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம்  தரவரிசைப் பட்டியலை அறிந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 21ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். 


அதன்படி, 2.10 லட்சம் பொறியியல் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் தொடங்க உள்ளது. இதில் ஆகஸ்ட் 23 வரை 7.5% இட ஒதுக்கிட்டு பிரிவு, சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் 25 முதல் அக்டோபர் 21 வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். 

1,58,157 பேருக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .கடந்த ஆண்டைக் காட்டிலும் 36,000 பேர் கூடுதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் படிப்பில் சேருவதற்கான ரேண்டம் எண் நடப்பாண்டில் கிடையாது என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?