டைட்டானிக் பட நடிகர் டேவிட் வார்னர் மரணம்! ரசிகர்கள் அஞ்சலி!

 

டைட்டானிக் படத்தில் நடித்த பிரபல பிரிட்டன் நடிகர் டேவிட் வார்னர் காலமானார். அவருக்கு வயது 82. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிறந்த வார்னர், புகழ்பெற்ற பிரிட்டிஷ் நாடகப் பள்ளியான ராயல் அகாடமி ஆஃப் டிராமாடிக் ஆர்ட்டில் பயின்றார். 1962-ல் மேடை நாடகத்தில் அறிமுகமான இவர், ராயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்தில் சேர்ந்தார். 1964-ல் வெஸ்ட் எண்டின் ஆல்ட்விச் தியேட்டர்ஸ் வெளியிட்ட தி வார்ஸ் ஆஃப் தி ரோசஸ் சைக்கிளில் ஹென்றி VI ஆக நடித்தார். அதன் பின்னர், பீட்டர் ஹாலின் 1965-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஹேம்லெட்டில் அவரை இளவரசர் ஹேம்லெட்டாக நடிக்க வைத்தார்.

அதனைத் தொடர்ந்து 1966-ம் ஆண்டு பிரிட்டிஷ் திரைப்படமான மோர்கன்: எ சூடபிள் கேஸ் ஃபார் ட்ரீட்மென்டில் நடப்பின் மூலம் அவர் திரையுலகில் பிரபலமானார். இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான பாஃப்டா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1978-ம் ஆண்டு 'ஹோலோகாஸ்ட்' என்ற குறுந் தொடரில் நடித்ததற்காக எம்மிக்கு பரிந்துரைக்கப்பட்டார், மேலும் 1981 குறுந்தொடரில் ரோமானிய அரசியல் சந்தர்ப்பவாதியான பொம்போனியஸ் பால்கோவாக நடித்ததற்காக எம்மி விருதை வென்றார்.

ஜேம்ஸ் கேமரூனின் 1997 காவியமான 'டைட்டானிக்' படத்திலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு வெளியான 'பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்', 2005-ல் வெளியான 'லேடீஸ் இன் லாவெண்டர்' படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன்றி கடந்த ஞாயிறன்று காலமானார். அவருக்கு லிசா போவர்மேன் என்ற மனைவி, மகன் லூக், மருமகள் சாரா மற்றும் அவரது முதல் மனைவி ஹாரியட் ஆகியோர் உள்ளனர். இவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?