நாளையே கடைசி!! 2 ஆண்டுகளுக்கு  மாதம் ரூ1500 உதவித் தொகை !! உடனே விண்ணப்பியுங்க!! 

 

தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், தமிழில் இலக்கியத் திறனை ஊக்குவிக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திறனறி தேர்வு நடத்தி உதவித் தொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுகள்  அரசு தேர்வுகள் இயக்ககம் மூலமாக நடைபெற உள்ளது. இதன்படி  2022-2023ம் கல்வியாண்டில் அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ 11ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர்  9ம் தேதி நாளை வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தமிழ்ப்பாடம் இதற்கான பாடத்திட்டம் ஆகும். இந்த தேர்வில் வினாக்கள் கொள்குறி வகையில் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். இத்தேர்வு தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ம் தேதி 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை மேற்கண்ட இணையதளம் மூலமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இத்தேர்வில் வெற்றிபெறும் 1,500 மாணவ-மாணவிகளில் 750 அரசு பள்ளி மாணவர்களுக்கும், 750 இதர பள்ளி மாணவர்களுக்கும்  ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!