சோகம்! மாணவியின் உடலை சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது!

 

மாணவி ஸ்ரீமதியின் உடலைச் சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது. முன்னால் சென்ற போலீஸ் வாகனத்தின் மீது மோதியதால், முன்புறம் சிறிது சேதமடைந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கணியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் அறப்போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் மறுபிரேத பரிசோதனை முடிந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு ஸ்ரீமதியின் உடலை பெற்றுக் கொள்வதாக பெற்றோர் நேற்று உறுதியளித்தனர்.

அதன்படி ஸ்ரீமதியின் உடலை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் பெற்றுக் கொள்ளும்படியும், அன்று மாலைக்குள் இறுதிச்சடங்குகளை அமைதியான முறையில் நடத்தி முடிக்கும்படியும் நீதிபதி சதீஷ்குமார் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மகள் ஸ்ரீமதியின் உடலை கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பெற்றோர் பெற்றுக் கொண்டனர். அதற்கு முன்னதாக மாணவியின் உடலுக்கு அமைச்சர் சிவி.சண்முகம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் கலெக்டர் ஷவரன் குமார் ஜடாவத், வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ் குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து மாணவியின் உடலை ஏந்திச் சென்ற ஆம்புலன்ஸ், இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்சின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் போலீஸ் வாகனங்கள் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆம்புலன்ஸ் வாகனம் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஆம்புலன்சின் முன்பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ் செல்லும் வழியிலும் பெரிய நெசலூர் கிராமத்திலும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் கண்காணித்து கொண்டு இருந்தனர். மேலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியும் நடைபெற்றது. மாணவி ஸ்ரீமதியின் இறுதிச் சடங்கில் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெளியாட்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் வெளிநபர்கள் யாரேனும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார்களா? என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர். மாணவியின் உடல் கொண்டு செல்லப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?