இதிலும் உதயநிதி தலையீடு... ஈபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு !!

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த பரபரப்பு நாள்தாேறும் நீடித்து வருகிறது.

இந்த நிலையில, அரியலூர் பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை, தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை எங்கும் நிறைந்திருப்பதாக குற்றம்சாட்டினார். நீட் தேர்வு விலக்கு, கல்வி கடன் ரத்து உள்ளிட்ட பொய் அறிவிப்புகள் மூலம் ஆட்சியை கைப்பற்றியதாகவும் விமர்சித்தார். 

மேலும், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள், உதயநிதி ஸ்டாலினின் தலையீட்டால் வெளியிட முடியவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசு புதிய திட்டங்களை கொண்டு வராமல், அதிமுகவின் திட்டங்களை முடக்குவதிலேயே முனைப்புடன் செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது நிறுவனம் சார்பில் தொடர்ந்து அதிக திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.