வீடியோ!!  போவோமா ஊர்கோலம்!! ஒரே சைக்கிளில் 9 பேருடன் ஜாலி ரைடு!! 

 


உலக மக்கள் தொகை நவம்பர் 15ம் தேதி 800 கோடியை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அன்றைய தினம் ஒரு தந்தை  தன்னுடைய 9 குழந்தைகளையும்  சைக்கிளில் முன்னும் பின்னுமாக ஏற்றிக்கொண்டு ஓட்டிச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்து உலக மக்கள் தொகை 800 கோடியை தொடுவதற்கு இதுபோன்ற நபர்களே காரணம் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த வீடியோ குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.  சைக்கிளில் ட்ரிபிள்ஸ் செல்வதற்கே மூச்சு வாங்கிவிடும். இவர் 9 பேருடன் அசால்ட்டாக ஓட்டுகிறாரே என வியந்து பாராட்டியுள்ளனர்.  சிலர் இவரை போல் பொறுப்பற்ற ஆட்களால் தான் மக்கள் தொகை மிதமிஞ்சியுள்ளது. இன்னும் சிலர் நெட்டிசன்கள் சைக்கிள் கம்பெனியையும் டயரின் தரத்தையும் பாராட்டியுள்ளனர்.  "இந்த சைக்கிள் நிறுவனமும்  டயர் நிறுவனமும் உண்மையில் ரொம்ப வலுவானதுதான்" என பதிவிட்டுள்ளனர்.