வைரல் வீடியோ!! 8 பேரக்குழந்தைகள் ராணிக்கு இறுதிச் சடங்கு!!

 

இங்கிலாந்தில்  ராணி 2ம் எலிசபெத் செப்டம்பர்  8ம் தேதி உயிரிழந்தார். இவரது உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்தில் குவிந்துள்ளனர். நாளை காலை இறுதி சடங்கு நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் பேரக்குழந்தைகள் அனைவரும் மேடையில் அவரது சவப்பெட்டியை சுற்றி நின்று அஞ்சலி செலுத்தினர்.


மன்னர் சார்லசின் மகன்களான வில்லியம் மற்றும் ஹாரி , இளவரசி அன்னேவின் குழந்தைகளான ஜாரா டிண்டால் மற்றும் பீட்டர் பிலிப்ஸ், இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களான பீட்ரைஸ் மற்றும் யூஜெனி, இளவரசர் எட்வர்ட் லேடி லூயிஸ் விண்ட்சர் மற்றும் ஜேம்ஸின் 2  குழந்தைகள் அனைவரும்  அஞ்சலி செலுத்தினர். வேல்ஸ் இளவரசர் மற்றும் சசெக்ஸ் பிரபு உட்பட ராணியின் எட்டு பேரக்குழந்தைகள் அவரது சவப்பெட்டியைச் சுற்றி நின்று அஞ்சலி செலுத்திய காட்சிகள் சமூக வலைதளங்கில் பதிவிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து சிம்மாசனத்தின் அடுத்த வாரிசான இளவரசர் வில்லியம் தலை குனிந்து, ராணியின் சவப்பெட்டியின் தலை அருகிலும், அவரது சகோதரர் இளவரசர் ஹாரி காலடியிலும் நின்று அஞ்சலி செலுத்தினர். அரச பரம்பரையின் ராணுவ வீரர்களான இளவரசர்கள் இருவரும் பாரம்பரிய ராணுவ சீருடையில் இருந்தனர். இளவரசர் ஹாரி ஏற்கனவே பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியாக ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்தவர் .

ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த  பொதுமக்கள் நீண்ட வரிசையில் 16 மணிநேரம் வரை காத்து கிடக்கின்றனர்.  லண்டனில் வெப்பநிலை 6 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளது. இதனையடுத்து  தன்னார்வலர்கள் பலர் வரிசையில் காத்துக்கிடக்கும் பொதுமக்களுக்கு போர்வைகள் மற்றும் தேநீர் கோப்பைகளை வழங்கி வந்தனர். இந்நிலையில், ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களிடம், மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசினர். பொதுமக்கள் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.  ராணியின் 4 குழந்தைகளான  சார்லஸ், அன்னே, ஆண்ட்ரூ மற்றும் எட்வர்ட்  அனைவரும் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினர். நாளை செப்டம்பர் 19ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை வரை ராணியின் உடல் அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர், ராணியின் உடல் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கிற்காக அருகிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என அரண்மணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!