வைரல் வீடியோ!! பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீடு!! ரசிகர்கள் உற்சாகம்!!
புகழ் பெற்ற கல்கியின் படைப்புக்களில் ஒன்றான 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக 'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. அதில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். ஒளிப்பதிவு ரவி வர்மன் . படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஐஸ்வர்ய லட்சுமி என முன்னணி நடிகர்கள், நடிகைகள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிடப்பட்டது. இந்த இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். திரைப்படத்தின் டிரைலர் 3.23 நிமிடங்கள் அளவில் வெளியிடப்பட்டது. 'பொன்னியின் செல்வன்-1' டிரைலர் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் படத்தை காண ஆவலுடன் காத்து கிடக்கின்றனர். தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!