undefined

கல்லூரி மாணவிகள் 30 பேருக்கு வாந்தி,  தலைசுற்றல், மயக்கம்!!  ஆய்வகத்தில் வாயு கசிவு?!

 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செகந்திராபாத் பகுதியில் உள்ள மேற்கு மாரேட்பள்ளியில் கஸ்தூரிபா காந்தி கல்லூரி செயல்பட்டு வருகிறது.  இந்த கல்லூரியின் ஆய்வகத்தில் நேற்று விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் 30 க்கும் மேற்பட்ட மாணவிகள்  மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் காரணமாக மயக்கமடைந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட  அனைத்து மாணவிகளும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.

ஆய்வகத்தில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதாக மாணவர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் கல்லூரி நிர்வாகம் கல்லூரியில்  எரிவாயு கசிவு இல்லை என மறுப்பு தெரிவித்ததை அடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!