நாளை தமிழகத்திற்கு எச்சரிக்கை!! வீட்டை விட்டு வெளியே வராதீங்க!!

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. அத்துடன் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும்  பல இடங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பின . மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத மழைப்பொழிவை கண்டது. பல மாவட்டங்களில் பெருமழை காரணமாக பள்ளி , கல்லூரிகளுக்கு தொடர்விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. தற்போது வானிலை நிலவரம் குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை  தெரிவித்துள்ளது. அதன்படி  நவம்பர் 18 நாளை முதல்  மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தி தற்போது  ஆழ்கடல் பகுதிகளில்  மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளவும்  அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 


இந்த எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலை அனைத்து துறைமுக மண்டல இயக்குநர் , துணை இயக்குநர்களுக்கும் மீன்வளத்துறை ஆணையர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . மேலும் நவம்பர் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழக  கடலோர பகுதிகளில் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை கடலில் சூறைக்காற்று வீசலாம் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!