ஓட்டுனர் ,நடத்துனர்களுக்கு எச்சரிக்கை !! போக்குவரத்து துறை சுற்றறிக்கை!!

 

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில்  இலவசமாக பயணிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அரசு பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்கள் இலவசமாக பயணம் செய்வதால் பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை போக்கும் வகையில் போக்குவரத்து துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில்  ஓட்டுநர் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அவர்களுக்குரிய  மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் . செப்டம்பர் 2022 மாதத்திற்கான தரவுகளை ஆய்வு செய்கையில் பல்வேறு வகையான ஒழுங்கீனங்கள் நடைபெற்றுள்ளன.  அதன்படி, ஓட்டுநர், நடத்துநர்கள் கால அட்டவணைப்படி, நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்க  வேண்டும். மாற்று வழித்தடத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தினை நிறுத்தி அங்கு காத்திருக்கும் பயணிகளை பாதுகாப்பாக ஏற்றவும், இறக்கவும் வேண்டும்.


அதே போல் வழியில் வரும்  பேருந்து நிலையத்திற்குள் செல்ல வேண்டும்.  பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிடக் கூடாது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். கட்டணங்களுக்குரிய பயணச்சீட்டுக்களை வசூலிக்க வேண்டும். பயணிகள் கொண்டுவரும் சுமைகளுக்கு உரிய சுமைக்கட்டண பயணச்சீட்டுகளும் வழங்கப்பட வேண்டும். ஓட்டுநர், நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது.

பணியின்போது வீண்வார்த்தைகள் மற்றும் தவறான பேச்சுக்கள், கைகலப்புக்களை அறவே தவிர்த்தல் வேண்டும்.பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி வருவாயை பெருக்கிட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!