துப்பாக்கியுடன் மேடையில் குத்தாட்டம்போடும் பெண்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் போது துப்பாக்கிச்சூடு நடத்துவது இன்றும் நடந்து வருகிறது. அது சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு எதிரானது என்றாலும் அங்குள்ள மக்கள் அதை பொருட்படுத்துவதில்லை. இதனால் சில நேரங்களில் அசம்பாவிதங்களும் அரங்கேறி வருகின்றது. இந்நிலையில் பீகாரில் சிவான் நகரில் கையில் துப்பாக்கியுடன் பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
அறைகுறை ஆடை அணிந்த பெண் ஒருவர் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் மேடையில் துப்பாக்கியுடன் நடனமாடுகிறார். அப்போது மேடையில் ஏறி அந்த பெண்ணுடன் நடனமாட இளைஞர்கள் சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களை அப்பெண் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அங்கிருந்து நகரச் சொல்கிறார். பின்னர் தொடர்ந்து நடனமாடுகிறார். அவர் மேடையில் ஆடிய முழுமைக்கும் தனது கையில் துப்பாக்கியுடனேயே ஆடுகிறார். இருப்பினும் அவரது கையில் உள்ள துப்பாக்கியை சற்றும் மதிக்காமல் அங்குள்ள இளைஞர்கள் அப்பெண்ணுடன் மேடையில் நடனம் ஆடுவதிலே குறியாக இருந்தனர்.