16 வயது மாணவியைக் காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல்.. திருவண்ணாமலையில் அதிர்ச்சி!
Nov 4, 2026, 20:30 IST
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபரைப் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த சபரி (21). இவர் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி காரில் வெளியூருக்குக் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் புரிந்துள்ளார்.
சிறுமியைக் காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கடத்தப்பட்ட சிறுமியை மீட்ட போலீசார், குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் சபரியைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.