16 வயது மாணவி கூட்டு பலாத்காரம்... 2 பேரைக் காதலித்ததால் வெறித்தனம்... 5 பேர் கைது!

 

அசாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில், வீட்டில் தனியாக இருந்த 16 வயது பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி இரவு, சிறுமியின் தாயும், சகோதரரும் பாட்டியின் இறுதிச் சடங்கிற்காக வெளியூர் சென்றிருந்தனர். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதாக தனது காதலனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை அறிந்த அவளது காதலன், தனது இரண்டு நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளான். அதே நேரத்தில், சிறுமியுடன் தொடர்பில் இருந்த மற்றொரு இளைஞரும் தனது நண்பருடன் அங்கு வந்துள்ளான். சிறுமி இருவரிடமும் பழகியதை அறிந்த அவர்கள், ஆத்திரத்தில் பழிவாங்கும் நோக்கில் ஒன்றிணைந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு இளைஞர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் என மொத்தம் 5 பேரும் சேர்ந்து சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர், செங்கலால் தாக்கியும், கொடூரமான முறையில் சித்திரவதை செய்தும் சிறுமியைப் படுகொலை செய்துள்ளனர். வீடு திரும்பிய தாயும் சகோதரரும் சிறுமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.