அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
Updated: Sep 7, 2026, 08:43 IST
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில், 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்குச் சொந்தமான கார் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 26 வயதான இறையன்பு என்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.