சிறுமிக்கு சாக்லேட் ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது முதியவர்!

 

மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்குச் சாக்லேட் தருவதாக ஆசை காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 60 வயது முதியவரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் ஜல்னா பகுதியைச் சேர்ந்த தினேஷ் சுவர்னகர் (60) என்ற முதியவர், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 6 வயது சிறுமிக்குச் சாக்லேட் தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டில் யாருமில்லாத நேரத்தைப் பயன்படுத்தி அந்தச் சிறுமியிடம் முதியவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

நடந்த கொடுமையால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அழுதுகொண்டே தனது தாயிடம் நடந்த விவரங்களைக் கூறியுள்ளார். சிறுவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு தினேஷ் சுவர்னகரைக்கைது செய்து சிறையில் அடைத்தனர்.