இளம்பெண்ணை ஆபாசப் படம் எடுத்து, சொத்துக்களைக் கேட்டு மிரட்டல் - தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் பெண்ணின் வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாசப் படம் எடுத்ததுடன், சொத்துகளைக் கேட்டு மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் தவெக நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தவெக வழக்கறிஞரான ரெஜினால்டு மற்றும் முன்னாள் காவலர் சைலஸ் ஆகிய இருவரும் மீது இப்புகார் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி ஆபாசப் படம் எடுத்ததுடன், அவரது சொத்துகளை எழுதித் தருமாறு மிரட்டல் விடுத்ததாகவும் இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், இது குறித்துத் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.