பாஜக நிர்வாகி கருப்பு முருகானந்தம் மீது பாலியல் புகார் - 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
திருச்சியைச் சேர்ந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பாஜக மூத்த நிர்வாகியான கருப்பு முருகானந்தம் மீது திருமணம் செய்வதாக ஏமாற்றியது மற்றும் மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக மூத்த நிர்வாகி கருப்பு முருகானந்தம் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதுடன், உயர் பதவியில் உள்ளவர்களுக்கு விருந்தாக்க முயன்றதாகவும் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் பாஜக தலைமைக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை ஆபாசப் படங்களைக் காட்டி மிரட்டியதாகவும், தொடர்ந்து பல்வேறு வழிகளில் துன்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கருப்பு முருகானந்தம் மீது காவல்துறையினர் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.