சினிமாவை மிஞ்சும் சேசிங்... பைனான்சியர் கடத்தல்!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே வளத்தியை சேர்ந்த பைனான்சியர் சிவா (40) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருந்தார். பின்னர் தகராறால் விவாகரத்து பெற்ற அவர், சொந்த ஊருக்கு திரும்பி மறுமணம் செய்து மீண்டும் பைனான்ஸ் தொழிலைத் தொடங்கினார். மதுரையில் தொழில் செய்தபோது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அங்குள்ளவர்களிடம் கடன் வாங்கி திருப்பி செலுத்தாததால், ஒரு கும்பல் அவரை தொடர்ந்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
நேற்று காலை, மதுரையில் இருந்து 2 கார்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், சிவாவை அவரது வீட்டிலிருந்து கத்தி முனையில் கடத்திச் சென்றது. இதையடுத்து, சிவாவின் பெற்றோர் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். எஸ்பி சரவணன் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷாராக இருந்தனர். சுங்கச்சாவடிகள் மற்றும் முக்கியச் சாலைகளில் சோதனை நடத்தப்பட்டபோதும், கும்பல் விழுப்புரம் புறவழிச் சாலையை வழியாக தப்பியது. முத்தாம்பாளையம் பகுதியில் போலீசாரைக் கண்டு, கும்பல் காரை திருப்பி ராங் ரூட்டில் வேகமாக ஓடச் செய்தது. அந்தபோது 5 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் ஜீப்பில் பின் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்க, கும்பல் ஜானகிபுரம் மேம்பாலம் அருகே சிவாவையும் அவரது காரையும் விட்டுவிட்டு மதுரை நோக்கி தப்பிச் சென்றது. கடத்தலிலிருந்து மீட்கப்பட்ட சிவா செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்பி சரவணன் உத்தரவின்படி, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பிய கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கடத்தல் கும்பலை துரத்திச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!