ஒரு வரமாக கடலில் உயிருடன் தத்தளிக்கும் மாடு.. அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடலூர் மாவட்டம் தாழங்குடி முகத்துவாரம் அருகே மேய்ந்து கொண்டிருந்த 35க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
அடித்துச் செல்லப்பட்ட மாடுகள் பல இறந்து கரை ஒதுங்கின, ஆனால் ஒரு எருமை மட்டும் உயிருடன் கடலில் மிதந்து வருகிறது. சுமார் 6 நாட்களாக சுமார் 9 நாட்டிகல் மைல் தொலைவுக்கு உயிருக்கு போராடி வரும் எருமையை மீட்க பெரிய படகு இல்லாததால், தாழங்குடா பகுதி மீனவர்கள் எருமை மாடுகளுக்கு குடிப்பதற்கு மட்டும் தண்ணீர் கொடுத்து வருகின்றனர்.
6 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் எருமை மாடு மீட்கப்படுமா என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!