undefined

பிரபல  மின்சார பைக் நிறுவனம் சம்பளம் தரல...  பொறியாளர் தற்கொலை...!  

 
 

பெங்களூருவில் உள்ள பிரபல மின்சார பைக் தயாரிப்பு நிறுவனத்தில் ஹொமொலொகேஷன் பிரிவில் பொறியாளராக பணியாற்றிய அரவிந்த் (38), வேலைப்பளு மற்றும் மேலதிகாரிகளின் தொல்லையால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார். நிறுவனம் தலைவர் பஹ்வேஷ் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரி சுப்ரதா குமார் தாஸ் ஆகியோர் சம்பளத்தை வழங்காமல் இழுத்தடித்ததுடன், தேவையற்ற அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

allowfullscreen

இதனால் மனமுடைந்த அரவிந்த் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி விஷம் அருந்தி உயிரிழந்தார். சம்பவத்துக்குப் பின் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரது வங்கி கணக்கில் நிறுவனத்திலிருந்து ₹17.46 லட்சம் தொகை டெபாசிட் செய்யப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார்.

அரவிந்த் தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது மரணத்துக்கு பஹ்வேஷ் அகர்வாலும் சுப்ரதா குமார் தாஸும் காரணம் என்றும், சம்பளத்தை வழங்காமல் துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்தது. இதையடுத்து, போலீசார் இருவர்மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!