undefined

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து.. மளமளவென எரிந்து ரயில் பெட்டிகள் நாசம்..!!

 

உத்தரப்பிரதேசம் வழியாக சென்ற டெல்லி - தர்பங்கா விரைவு ரயிலின் 3 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


 

தர்பங்கா சிறப்பு ரயில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சராய் போபட் ரெயில் நிலையம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, எஸ்1 பெட்டியில் புகை வருவதைக் கண்ட ரெயில் நிலைய அதிகாரி உடனடியாக ஒட்டுநரிடம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கிவிடப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.