அமோக வெற்றி.. டெல்லி பல்கலையை மீண்டும் கைப்பற்றியது ABVP

 

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவு பெற்ற ஏ.பி.வி.பி அமைப்பு மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவு பெற்ற ஏ.பி.வி.பி அமைப்பு அமோக வெற்றி பெற்று மீண்டும் சங்கத்தின் தலைமையைைக் கைப்பற்றியுள்ளது.

மொத்தம் உள்ள முக்கியப் பதவிகளில் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் இணைச்செயலாளர் ஆகிய மூன்று முக்கியப் பதவிகளையும் ஏ.பி.வி.பி வேட்பாளர்கள் தங்களது வசமாக்கி பல்கலைக்கழகத்தில் தங்களது பலத்தை நிரூபித்துள்ளனர்.

இதனிடையே, இத்தேர்தலில் துணைத் தலைவர் பதவியில் மட்டும் சுயேச்சையாகப் போட்டியிட்ட தீபான்ஷு என்பவர் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.