நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை - திரளாக கலந்துக் கொண்ட பெண்கள்!
Sep 12, 2026, 15:45 IST
நாகர்கோவில் அருகே பிரசித்தி பெற்ற நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
சுமங்கலி பூஜை என்பது பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தின் நல்வாழ்வுக்காகத் தொடர்ந்து மேற்கொள்ளும் ஒரு சிறப்பு வழிபாட்டாகும். நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் இச்சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அம்மனைத் தரிசித்தனர்.
இதையொட்டி கோவிலில் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரங்களும் வழிபாடுகளும் செய்யப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர்.