பெரும் பரபரப்பு... முதல்வர் சித்தராமையா நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் மயக்கம்!
கரூரில் நடிகர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், அடுத்த அதிர்ச்சியாக நேற்று கர்நாடகாவில் சித்தராமையா நிகழ்வில் கூட்டநெரிசலில் சிக்கி 13 பேர் மயக்கமடைந்தனர்.
கர்நாடக மாநிலம் தட்சண கன்னட மாவட்டம் புட்டூர் பகுதியில் ‘அசோகா ஜனமன 2025’ என்ற பெயரில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பங்கேற்றார். புட்டூர் தொகுதிப் பொறுப்பாளர் எம்.எல்.ஏ. அசோக் குமார் ராய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை காண பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர்.
நேற்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிக்காக பலர் காலை முதலே காத்திருந்தனர். முதல்-மந்திரி சித்தராமையா மதியம் 1 மணியளவில் மேடைக்கு வந்தார். நிகழ்ச்சி மாலை 3 மணி வரை நீடித்தது. இதற்கிடையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சேலைகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
நீண்ட நேரமாக சுமார் 6 மணிநேரத்திற்கும் மேலாக கூட்ட நெரிசலில் நின்றிருந்த சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் மொத்தம் 13 பேர் மயக்கம் அடைந்தனர். இவர்களில் 3 பெண்கள் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படாததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. கரூரில் நிகழ்ந்த 41 பேர் உயிரிழப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த அதிர்ச்சியாக கர்நாடகாவில் அரசியல் பொதுநிகழ்ச்சியில் பலர் மயக்கமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!