தமிழக ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து லாரி மீது மோதி விபத்து... ஒருவர் பலி; 19 பக்தர்கள் படுகாயம்!
தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு மினிபேருந்தில் ஐயப்ப பக்தர்கள் சென்றிருந்தனர். இவர்கள் சபரிமலையில் தரிசனத்தை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஆரியங்காவு சோதனைச் சாவடி அருகே சரக்கு லாரி ஒன்றின் மீது எதிர்பாராத விதமாக மினிபேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 46 வயதான பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.
அந்த பேருந்தில் மொத்தம் 24 பேர் இருந்த நிலையில், 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!