அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - மீனவர்களுக்கு எச்சரிக்கை!
Updated: Oct 2, 2026, 07:20 IST
அக்டோபர் 13ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வலுவடையும் வாய்ப்பு: அந்தமான் பகுதியில் உருவாகும் இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, அதனைத் தொடர்ந்து படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதி மக்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.