வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... டிச.2-ல் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

 

வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வரும் டிசம்பர் 2-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இந்த அமைப்பு அடுத்தடுத்த நாட்களில் நகர்ந்து, டிசம்பர் 2-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நகர்வை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மழை வாய்ப்பு மற்றும் அடுத்தடுத்த வானிலை மாற்றங்கள் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.