மின்தடையைத் தடுக்க புதிய திட்டம்... வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவு!

 

தமிழ்நாட்டில் பரவலாக ஆங்காங்கே அடிக்கடி ஏற்படும் மின்தடைகளைத்தடுத்து, பொதுமக்களுக்குத் தடையற்ற மின் விநியோகத்தை வழங்குவதற்காகத் தமிழ்நாடு மின்சார வாரியம்புதிய மற்றும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

மின்வாரியம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் எப்போதெல்லாம் மின் தடை ஏற்படுகிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணித்து, அதுகுறித்த விவரங்களைப் பகுதி வாரியாகப் பிரத்யேகப் பதிவேட்டில் ஊழியர்கள் கட்டாயம் பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தெந்தப் பகுதிகளில் மின்தடைப் பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன என்பதை மின்வாரியத் தலைமை நேரடியாகக் கண்காணிக்கும்.

ஒட்டுமொத்தமாக மின்தடை ஏற்படுவதைக் காட்டிலும், ஒரு சில குறிப்பிட்ட துணை மின் நிலையங்கள், ஃபீடர்கள் மற்றும் மின் வலையமைப்பு பகுதிகளில் மட்டுமே தொடர்ச்சியாகவும் அடிக்கடி மின்தடை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் குறிப்பிட்ட மின் வழித்தடப் பகுதிகளைத் தனியாகக் கண்டறிந்து, அங்கு மின்தடை ஏற்படுவதை நிரந்தரமாகத் தடுப்பதற்கான புதிய சிறப்புச் செயல் திட்டங்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோடைக் காலம் மற்றும் மின் தேவை அதிகரிப்பு போன்ற சூழல்களில் ஏற்படும் திடீர் மின்தடைகளால் பொதுமக்கள் அவதியுறுவதைத் தவிர்க்கவும், மின் கட்டமைப்புப் பழுதுகளை முன்கூட்டியே கண்டறிந்து சீரமைக்கவும் மின்வாரியம் இந்த அதிரடி சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.