தமிழகத்தில் உதயமாகும் புது அரசியல் கட்சி.. நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் களஞ்சியம்!

 

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய இயக்குநர் சோழன் மு. களஞ்சியம், விரைவில் புதிய தமிழ்த்தேசிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் நீண்ட காலமாகப் பயணித்து வந்த இயக்குநர் களஞ்சியம், கடந்த காலங்களில் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இருப்பினும், 2026 ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு சீமானுக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் அ்க்கட்சியிலிருந்து விலகினார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, தற்போது தீவிரமான அரசியல் முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ள அவர், மாநில நலனை மையமாகக் கொண்டு புதிய தமிழ்த்தேசிய அரசியல் கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இது குறித்த முறையான மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.