மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவல்... 6,000 மாணவர்கள் பாதிப்பு!
மலேசியாவில் எக்ஸ்.எப்.ஜி எனும் புதிய வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து உள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களில் காணப்பட்ட இந்த வகை, மலேசியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் பலர் மர்ம காய்ச்சல் மற்றும் இன்புளூயன்சா போன்ற நோய்கள் கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் பள்ளிகளில் இந்த தொற்று பரவல் ஏறக்குறைய ஒரு வாரத்தில் 14 சம்பவங்களில் இருந்து 97 சம்பவங்களாக உயர்ந்து உள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க, பாதிக்கப்பட்ட பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் 5–7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதிகமான மக்கள் சேரும் இடங்களில் தடுக்கப்பட வேண்டும் என்றும் முக கவசம் அணிவது கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பும் இதை கவனத்தில் வைத்து, கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் வகைப்படுத்தி உள்ளது. வருகிற நவம்பரில் நடக்கவுள்ள பள்ளி இறுதி தேர்வுகளை முன்னிட்டு, இந்த பரவல் அரசு மற்றும் கல்வியமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!